18 வயது டயானா சாம்பியன்

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் 18 வயது உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா சாம்பியன் பட்டம் வென்றார். உலக தரவரிசையில் 102வது இடத்தில் உள்ள டயானா, இறுதிப் போட்டியில் சீனாவின் கியாங் வாங்குடன் (24வது ரேங்க்) நேற்று மோதினார்.

தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த டயானா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று தனது முதல் டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி 1 மணி, 5 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: