பியூனாஸ்ஏர்ஸ்: இளைஞர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சவுரவ் சவுதாரி தங்கம் வென்று அசத்தினார்.அர்ஜென்டினாவின் பியூனாஸ்ஏர்சில் நடக்கும் இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரில், ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீரரான 16 வயதாகும் சவுரப் சவுதாரி, தகுதிச்சுற்றில் 600க்கு 580 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இறுதிச் சுற்றிலும் அபாரமாக செயல்பட்ட அவர் 244.2 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம், இளைஞர் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வெல்லும் 2வது நபர், ஆண்கள் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் வீரர் என்ற சாதனைகளை படைத்தார்.