குஜராத் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டு சிலைகள் : 2 வாரத்தில் பதில் அளிக்க சாராபாய் அறக்கட்டளைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : குஜராத் மாநிலம்  சாராபாய்  அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக கோவில் சிலைகளை மீட்க கோரிய மனுவிற்கு 2 வாரங்களில் பதில் அளிக்க சாராபாய் அறக்கட்டளைக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத் சாராபாய் அறக்கட்டளை அருங்காட்சியகத்தில் உள்ள நடராஜர் சிலைகள் உள்ளிட்ட 36 வெண்கல சிலைகள், 3 வெண்கல விளக்குகள், 8 கற்சிலைகளை மீட்க  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மகாதேவன் மற்றும் ஆதிகேசவன் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சிலைகள் 1940ல் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த கோவிந்தசாமி நாதன் என்பவரிடம் வாங்கியதாக சாராபாய் அறக்கட்டளை கூறுவதாகவும் அந்த காலத்தில் அப்படி ஒரு அரசு தலைமை வழக்கறிஞர் இல்லை என்றும் மனுதாரர் யானை ராஜேந்திரன் வாதிட்டார்.

சமீபத்தில் சாராபாய் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜன் சிலையும், லோகமாதேவி சிலையும் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சிலைகள் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டதாகவும் திருட்டு சிலைகள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து மனுவிற்கு 2 வாரங்களில் பதில் அளிக்க  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் சாராபாய் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரருக்கு  அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: