மண் கிடைக்காமல் முடங்கும் செங்கல் சூளைகள்

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டதில் செங்கல் சூளைகளுக்கு தேவையான மூலப்பொருளான மண் கிடைக்காமல் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரிமாவட்டம் தோவாளை தாலுகாவில் ஆரல்வாய்மொழி, தோவாளை மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.  

செங்கல் தயாரிக்க  தேவையான மண் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மண் தட்டுப்பாட்டால் செங்கல் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது செங்கல் ₹5 முதல் 5.50 வரை விற்பனையாகிறது.  இதனால் சிலர் கட்டுமானத்திற்கு செங்கலை பயன்படுத்தாமல் சிமெண்ட் கல்லினை பயன்படுத்துகின்றனர். பல இடங்களில் கட்டுமான தொழிலை பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.   குமரிமாவட்டதில் மண் கிடைக்காததால் வெளி மாவட்டங்களில் இருந்து மண் கொண்டு வரப்படுகிறது. இதனால் பெரும்பாலான செங்கல் சூளையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த  தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என செங்கல் சூளை தொழிலாளர்களும், உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: