ரப்பர் தோட்டத்தில் வைத்திருந்த கண்ணியில் சிக்கி சிறுத்தை பலி

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே நலங்காடி என்ற இடத்தில் ராகுல்சாலி என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழைக்கு பின் இவரது தோட்டத்திற்கு வனவிலங்குகள் அடிக்கடி வந்து செல்ல துவங்கின. இதனால் ராகுல்சாலி தனது தோட்டத்தில் வனவிலங்குகள் உள்ளே நுழையாத வண்ணம் சுருக்கு கண்ணி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று இந்த சுருக்கி கண்ணியில் ஆண் சிறுத்தை ஒன்று சிக்கிகொண்டது. இதை பார்த்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பாலக்காடு மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இருந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுருக்கு கண்ணியில் சிக்கியிருந்த சிறுத்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர். கால் நடைமருத்துவ அதிகாரிகள் பினோய்(திருச்சூர்) மிதுன்(பாலக்காடு) ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழு சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு அதன் கழுத்தில் சிக்கியிருந்த கண்ணியை விடுவித்தனர். பின்னர் கூண்டில் ஏற்றி பாலக்காடு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வழியில் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்து. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் கண்ணியில் சிக்கியிருந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: