ராமர் கோயிலை மறந்துவிட்டு முஸ்லிம் பெண்களுக்கு வக்கீலாகி விட்டார் மோடி: பிரவீன் தொகாடியா கடும் தாக்கு

பதான்: ‘‘ராமர் கோயிலை மறந்துவிட்டு, முஸ்லிம் பெண்களுக்கு வக்கீலாக மாறிவிட்டார் பிரதமர் மோடி’’ என பிரவீன் தொகாடியா பேசி உள்ளார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, தற்போது, ‘அந்தராஷ்டிரியா இந்து பரிஷத்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், பதானில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ராமர் கோயில் கட்டவும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ திரும்பப் பெறவும்தான் பிரதமர் மோடியை இந்த நாடு தேர்ந்தெடுத்தது. ஆனால், அவரோ கோயிலுக்கு பதிலாக மசூதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்.  

ராமர் கோயிலுக்காக ஒரு வக்கீலாக அனுப்பப்பட்ட மோடி, தற்போது ராமர் கோயிலை மறந்து விட்டு, முஸ்லிம்களின் மனைவிகளுக்கு வக்கீலாக மாறிவிட்டார் (முத்தலாக் சட்ட விரோதமாக்கப்பட்ட மசோதாவை குறிப்பிட்டு இவ்வாறு கூறினார்). இந்த ஆட்சியில் ராணுவ வீரர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகள், இளைஞர்கள் பெரும் துயரப்படுகின்றனர். 2019 தேர்தலானது மக்கள் தங்கள் தவறை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை தந்துள்ளது. உங்களின் வாக்கு மாற்றத்துக்கான வாக்காக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: