பயமுறுத்தும் மீனம்பட்டி துணை சுகாதார நிலைய கட்டிடம்

சிவகாசி: சிவகாசி அருகே மீனம்பட்டி துணை சுகாதார நிலையம் சேதமடைந்திருப்பதால் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர். சிவகாசி அருகே மீனம்பட்டியில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. மீனம்பட்டி மற்றும் அருகிலுள்ள கிராமத்திலிருந்து கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனர். துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. அவ்வப்போது காரைப்பூச்சு பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகள், பெண்கள் அச்சமடைந்துள்ளனர். செவிலியர்களும் ஒருவித பயத்துடனே பணியாற்று வருகின்றனர். இடிந்து விபரீதம் ஏற்படும் முன் மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: