சென்னை: பிரபல ரவுடி நாகூர் மீரான் உட்பட 4 பேரை, சென்னை கே.கே.நகரில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்கள் கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு தங்கியிருந்த ரவுடிகள் நாகூர் மீரான், வினோத், குறளரசன் மற்றும் சதிஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவர்கள் பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களாவர்.
போலீசார் விசாரணையின் போது, அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 2 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி நாகூர் மீரான் 2010 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடந்த இரு கொலை வழக்குகளின் முதல் குற்றவாளி ஆவார். இவர் மீது குன்றத்தூர், வேலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி