அமித்ஷா எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் காங். புகார்

புதுடெல்லி: ரூ.25 கோடி மதிப்பிலான சொத்து விவரத்தை மறைத்த, பாஜ தலைவர் அமித்ஷாவின் எம்.பி. பதவியை ரத்து செயய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து, கடந்த ஆண்டு மாநிலங்களவைக்கு பாஜ தலைவர் அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், ரூ.25 கோடி சொத்து விவரத்தை மறைத்தாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி, விவேக் தன்கா ஆகியோர் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ‘‘மாநிலங்களவை தேர்தலின்போது, அமித்ஷா அளித்த பிரமாணப் பத்திரத்தில், ரூ.25 கோடி சொத்து விவரத்தை மறைத்துள்ளார். இந்த சொத்தை அடமானமாக வைத்து, அவர் ரூ.25 கோடியை கடனாக பெற்றுள்ள நிலையில், அதை தெரிவிக்காதது குற்றம். இதனால் அவரது எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, காங்கிரசின் இந்த புகாரை பாஜ திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘அமித்ஷா எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை’ என்று அக்கட்சி கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: