கயானா: வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது. புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்ற அமேசான் வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது. செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான கிறிஸ் கேல் அதிகபட்சமாக 86 ரன் (65 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். கூப்பர், கட்டிங் தலா 15 ரன் எடுத்தனர்.