சிறப்பு அந்தஸ்து வலியுறுத்தி ஆந்திராவில் நாளை ‘பந்த்’

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. இதுகுறித்து, திருப்பதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி வரபிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விஷயத்தில் மக்களை ஏமாற்றிய பாஜ, தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து 24ம் தேதி (நாளை) மாநிலம் தழுவிய பந்த்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தெலுங்குதேசம் கட்சி நாடாளுமன்றத்தில் பாஜ அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்வைத்தது.

இதில், பாஜ அரசு வெற்றிபெற்றது. இதுஒரு நாடகம். நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் எம்பி கல்லா ஜெயதேவ் பேசியது, ஆந்திர மக்களை உலக அரங்கில் குறைத்து மதிப்பிட வைத்துவிட்டது. சிறப்பு அந்தஸ்துக்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் தான் நாடாளுமன்றத்தில் அமளி, கோரிக்கை என எப்போதும் போராடி வருகிறோம். இப்போதும் 6 எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: