வொர்செஸ்டர்: இந்தியா ஏ அணியுடனான டெஸ்ட் போட்டியில் (4 நாள்), அலஸ்டர் குக்கின் சதத்தால் இங்கிலாந்து லயன்ஸ் அணி அபாரமாக ரன் குவித்தது. வொர்செஸ்டர் கவுன்டி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் பர்ன்ஸ், அலஸ்டர் குக் களமிறங்கினர். பர்ன்ஸ் 5 ரன்னில் வெளியேற, அலஸ்டர் குக் - நிக் கப்பின்ஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 155 ரன் சேர்த்தது. கப்பின்ஸ் 73 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து குக் - டேவிட் மாலன் 3வது விக்கெட்டுக்கு 181 ரன் சேர்த்தனர்.