9 வகை போதை

*     இன்டர்நெட், ஷாப்பிங், உணவு, கஃபைன், புகையிலை, போதைப் பொருள், செக்ஸ், சூதாட்டம் ஆகிய 8 விஷயங்களில் ஏதேனும் ஒன்றுக்கு உலக மக்களில் பெரும்பகுதியினர் பழகிப் போய் அடிமையாக மாறியிருக்கிறார்கள். ஆனால், இந்த எட்டையும் தாண்டி, எட்டாத உயரத்தில் இருக்கிறது குடி!

*     சாதாரணமாக ஆரம்பிக்கும் ஒரு தேவையை நாளடைவில் அடிமைத்தனமாக மாற்றுவது மூளையில் இருக்கும் Reward center என்ற பகுதிதான்.

*     போதைப்பொருட்கள் மூளையில் என்னவெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ, அதே வேதியியல் மாற்றங்களைத்தான் இன்டர்நெட்டும் மூளையில் ஏற்படுத்துகிறது.

*    ‘மது மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதில்லை என்பதில் நான் அதிக தீவிரத்துடன் இருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கை மிக அழகானது!’ என்ற ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரியின் புகழ்பெற்ற வாசகம் ஒவ்வொருவரும் மனதில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

*    மதுவின் நச்சுத்தன்மைக்கு பெண்கள் எளிதில் ஆட்படுவார்கள். ஒரு நாளைக்கு 60 மி.லி. அளவு குடித்தால் கூட, பெண்ணின் உடல் தன்மைக்கு அதிக பாதிப்பை உண்டு பண்ணும்.

*     இருமல் மருந்தில் வலியைத் தாங்கி, தூக்கத்தைத்   தருவதற்காக சேர்க்கப்படும் கொடின் வகை மருந்துகளை போதையை விரும்புகிறவர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மனநோயாளியாகும் வாய்ப்பு அதிகம்.

*     சிர்ரோசிஸ் எனும் கல்லீரல் பிரச்னை காரணமாக உயிர் இழப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுவினால்தான் அந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

*     உடலில் ஒரே நேரத்தில் பல உறுப்புகளைப் பாதிக்கிற ஒரு வஸ்து இருக்கிறது என்றால், அது புகையிலைதான். இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான நச்சுக்கள் இருக்கின்றன.

*     எந்த போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களையும் அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டுக் கொண்டு வருவது சாத்தியம்தான். தகுந்த கவுன்சலிங் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன. போதைக்கு ஆளானவர் நமக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் குணமாகும் வேகம் அதிகமாகும்.

*     புகையிலையில் உள்ள நிக்கோட்டின் தீவிரமான போதைப் பழக்கத்தை உண்டாக்கும் ஒரு பொருளாக உள்ளது. அது சில நாட்களுக்கு உற்சாக உணர்வைத் தரும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல உங்கள் இதயம், நுரையீரல், வயிறு மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தொகுப்பு : ஜி.ஸ்ரீவித்யா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: