போடியில் ஓபிஎஸ் வீட்டு சாலை மட்டும் ஸ்மார்ட் பொதுமக்களின் தெருவோ குண்டும், குழி-அமைச்சருக்கு வசதி; அப்பாவி மக்களுக்கு?

போடி :  போடியில் ஓபிஎஸ் வீட்டு சாலை மட்டும் ஸ்மார்ட்டாகவும், பொதுமக்கள் வசிக்கும் தெருவோ குண்டும், குழியுமாக இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். அமைச்சருக்கு ஒரு நீதி, அப்பாவி மக்களுக்கு ஒரு நீதியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நகரில் 4 ஆண்டுகளுக்கு மேலாக பாதாளச் சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது. நகரில் ரூ.72 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகளும் நடந்து வருகிறது. குழாய்களை பதிக்கிறோம் என்ற பெயரில் சாலைகள், தெருக்களில் தோண்டிய பள்ளங்களை மூடவில்லை. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து அவதிப்படுகின்றனர். இதனிடையே, தேர்தலை மனதில் கொண்டு நகரின் பல இடங்களில் தார்ச்சாலையை அவசர கதியில் போட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும் சுப்புராஜ் நகர் பகுதியில் மட்டும் தரமான முறையில் தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்கள் குடியிருக்கும் கீழத்தெரு, ஜமீன் தோப்பு தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் தெருக்கள், சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதிகாரம் படைத்தவருக்கு ஒரு நீதி, பொதுமக்களுக்கு ஒரு நீதியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். …

The post போடியில் ஓபிஎஸ் வீட்டு சாலை மட்டும் ஸ்மார்ட் பொதுமக்களின் தெருவோ குண்டும், குழி-அமைச்சருக்கு வசதி; அப்பாவி மக்களுக்கு? appeared first on Dinakaran.

Related Stories: