100 முறை சிறை சென்ற திருடன் கைது

கோவை: கோவை குனியமுத்தூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர்  சபீர் அகமது  (42). சுமை தூக்கும் தொழிலாளி. டவுன் பஸ்சில் சென்றபோது செல்போனை பறித்து தப்ப முயன்றபோது ஒருவரை பிடித்து பெரிய கடைவீதி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் கோவை செல்வபுரம் அரசமரம் வீதியை சேர்ந்த ஆறுமுகம் (55) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஆறுமுகம் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ சிறு வயதில் போண்டா, வடை என பலகாரம் திருடினேன். 14 வயதில் வீட்டில் இருந்த பொருட்களை திருடி விற்றேன். பின்னர் அதுவே எனக்கு தொழிலாக மாறிவிட்டது. 40 ஆண்டாக திருடி வருகிறேன். கோவை சிறைக்கு 100 முறை சென்று வந்திருக்கிறேன். எவ்வளவு வழக்கு இருக்கிறது என எனக்கே தெரியாது. ’’ என்று கூறியுள்ளார். …

The post 100 முறை சிறை சென்ற திருடன் கைது appeared first on Dinakaran.

Related Stories: