பனியன் நிறுவன அதிபர் ரூ25 கோடி மோசடி: பாதுகாப்பு கோரி போலீசில் தஞ்சம்

அவிநாசி: பொதுமக்களிடம் கடன் வாங்கி ரூ25 கோடி மோசடி செய்த பனியன் நிறுவன அதிபர், பாதுகாப்பு கோரி அவிநாசி போலீஸ் நிலையத்தில் தஞ்மடைந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காமராஜர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (33). இவர், அவிநாசி அருகே நாதம்பாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், திருப்பூர், சேலம், அவிநாசி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ25 கோடிக்கு மேல் கடன் பெற்று, வட்டி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க திரண்டு வந்தனர்.

இதையறிந்த சங்கர், அவிநாசி போலீசில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் அளித்ததையடுத்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரும் விசாரிக்கின்றனர். இது அவிநாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல் கொள்முதலில் ரூ5 கோடி சுருட்டல்
திண்டிவனத்தை தலைமையிடமாக கொண்ட பசுமை சங்கம் எனும் பெயரில் ஜெய்கணேஷ் என்பவர் நடத்திய நிறுவனத்தின் கிளை அலுவலகம் திருவண்ணாமலை ஏந்தல் பகுதியில் செயல்பட்டது. நெல்லுக்கு கூடுதல் விலை தருவதாக சொன்னதால், ஒவ்வொரு விவசாயியும் சுமார் ரூ1 லட்சம் முதல் ரூ3 லட்சம் வரை நெல் வழங்கியுள்ளனர். ஆனால், இதுவரை அதற்கான தொகையை தராமல், நிறுவனத்தை மூடிவிட்டு ஜெய்கணேஷ் தலைமறைவாகிவிட்டார். திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் ரூ5 கோடி வரை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரின்படி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பனியன் நிறுவன அதிபர் ரூ25 கோடி மோசடி: பாதுகாப்பு கோரி போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: