சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி சிறுவனுக்கு பாலியல் தொல்லை சாமியார் உள்பட 3 பேர் கைது

பூந்தமல்லி: சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி, ராமாபுரத்தில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனியாக வசித்து வருகிறார். இவரது 2 மகன்களும், கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவர்களின் தந்தை தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவதால், தனது இரு மகன்களையும் ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள தனது தம்பி வீட்டில் விட்டுச் செல்வார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவர்களின் சித்தப்பா வீட்டில் பூஜை நடந்துள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சாமியார் ஹரீஷ் (38), விஜி (எ) ஜெயக்குமார் (30), சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (41) ஆகிய 3 பேரும் பூஜையை செய்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த 14 வயது சிறுவனை தனியாக அழைத்து சென்று சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதை நம்பி, சிறுவனை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது, சாமியார் உள்பட 3 பேரும் சேர்ந்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது. மீறினால், கொன்று விடுவோம், என்று சிறுவனை மிரட்டி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் இருவரும் அவரது தாயாரை பார்க்க பள்ளிக்கரணைக்கு சென்றனர். அப்போது 14 வயது மகனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், அதுகுறித்து விசாரித்துள்ளார்.

அப்போது, சித்தப்பா வீட்டில் நடந்த பூஜையின்போது, 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி தெரிவித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த 14 வயது சிறுவனின் தாயார், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சாமியார் ஹரீஷ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி சிறுவனுக்கு பாலியல் தொல்லை சாமியார் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: