நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

நெல்லை, பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 2வது நாளாக ஈடுபட்டுள்ளனர். முன்னீர்பள்ளம் அடுத்த அடைமிதிப்பான் குளத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுமார் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டனர். இந்த பணியில் 2 லாரிகள், 3 ஹிட்டாச்சி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத பாறை உடைந்து கல்குவாரியில் விழுந்தது. இதில் 3 தொழிலாளர்கள் பலியாகினர்.

The post நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: