தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

தாய்லாந்து நாட்டில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருப்பதற்கு காரணம் அங்கிருக்கும் குரங்குகள். இங்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளால் குரங்குகளுக்கு எப்போதும் உணவு கிடைத்து கொண்டே இருக்கும். இதனால், சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி ஆண்டுதோறும் குரங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சீனர்களின் முறைப்படியான விருந்தோம்பல் நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தொடங்கிய குரங்குகள் படையல் திருவிழா இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சக்கர நாற்காலி மற்றும் மேசைகளில் குரங்களுக்கென பிரத்தியேகமான பழ வகை, காய்கறிகள் கலந்த சாலட், ஐஸ் கிரீம் உள்ளிட்ட உணவுகளை பரிமாறின. மேலும், அவற்றை குரங்குகள் ருசித்து சாப்பிடுவதை சுற்றி நின்று சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்தனர்.

The post தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..! appeared first on Dinakaran.

Related Stories: