நோலன் பட டிக்கெட் விலை தெரியுமா?

தற்போது கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது திரைப்படமான ‘தி ஒடிசி’ (The Odyssey)-யை இயக்கியுள்ளார். கிரேக்கக் கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற ‘ஒடிசி’ காவியத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதுவரை அறிவியல் புனைவு மற்றும் திரில்லர் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த நோலன், முதல் முறையாக புராணக் கதையை திரைப்படமாக உருவாக்கியிருப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘தி ஒடிசி’ திரைப்படம் இன்று உலகளவில் வெளியாகிறது. இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் கோவையில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.508 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் டிக்கெட் விலை குறைவாக வசூலிக்கப்படுகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ரூ.800 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Related Stories: