சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்கி குடிபோயுள்ளார் ஸ்ருதி ஹாசன். பெரும்பாலும் மும்பையில் தங்கும் ஸ்ருதிஹாசன், அங்கேயே அபார்ட்மென்ட் ஒன்றில் லீசுக்கு தங்கியிருந்தார். இந்நிலையில் சென்னைதேனாம்பேட்டையில் அபார்ட்மென்ட் ஒன்றில் சொந்த வீட்டை அவர் வாங்கியிருக்கிறார். இதற்கான கிரகப்பிரவேசம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. இதில் அவரது நெருங்கிய தோழிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
இந்த பூஜையில் ஸ்ருதிஹாசனும் அந்த தோழிகள் மட்டுமே கலந்துகொண்டனர். வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் பாலிவுட்டில் நடிக்கவும்தான் அவர் மும்பையில் இத்தனை காலம் தங்கியிருந்தார். எதிர்பார்த்தபடி பாலிவுட் வாய்ப்பு அமையாததால் சென்னைக்கே அவர் திரும்பியுள்ளார்.
