லாஸ்ஏஞ்சல்ஸ்: ‘ஜுராசிக் பார்க்’ என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சாம் நீல் காலமானார். அவருக்கு வயது 78. நியூசிலாந்தை சேர்ந்த சாம் நீல், உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிட்னியில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு சர்வதேச திரையுலகில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1980கள் மற்றும் 1990களில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த சாம் நீல்,
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜுராசிக் பார்க்’ என்ற படத்தில், டாக்டர் ஹலன் கிராண்ட் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பிறகு வெளியான ‘ஜுராசிக் பார்க் III’, ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ஆகிய படங்களிலும் அதே கேரக்டரில் நடித்திருந்தார். மேலும், ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘தி பியானோ’ உள்பட பல முக்கிய படங்களிலும் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.
