எல்லோர் முன்னாடியும் ஆடை அணிய சொல்வதா?.. போட்டோ கிராபர்கள் மீது ஜரீன் கான் ஆவேசம்

மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜரீன் கான், ஆடைகளை தேர்வு செய்தபோது, அங்கிருந்த போட்டோகிராபர் ஒருவர், அவரை அங்கேயே ஆடை அணிந்து பார்க்கும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜரீன் கான், ‘எல்லோருக்கும் முன்னாடியா? அது நடக்காது. என்னிடம் தேவையற்ற வீண் பேச்சுகளை பேச வேண்டாம். அதையெல்லாம் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். நீங்கள் பேசும்போது, உங்களின் எல்லைக்குள் இருந்து பேசுங்கள்’ என்று போட்டோகிராபர்களை கடுமையாக எச்சரித்தார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நடிகையின் துணிச்சலான பதிலடிக்கு நெட்டிசன்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஜரீன் கான், தமிழில் கடந்த 2013ல் நகுல், சாந்தினி தமிழரசன் நடிப்பில் திரைக்கு வந்த ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடி இருந்தார்.

Related Stories: