ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அதிருப்தியா..?

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்க, நெருங்க பரபரப்பு அதிகமாகி வருது. முக்கிய கட்சிகள் வரிசையாக வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிட்டிங் எம்எல்ஏக்களும், முக்கிய நிர்வாகிகளும் மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர். மேலும் பலர், தலைமை மீது அதிருப்தி தெரிவித்து, தேர்தல் பணியிலிருந்து ஒதுங்கப்போவதாக அறிவித்துள்ளனர். ஆளும்கட்சியினர் ஒருபுறம் சுணக்கத்தில் உள்ள நிலையில், முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யத்திலும் சீட் கிடைக்காத விரக்தியில் நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மாங்கனி தொகுதியில் போட்டியிட்ட நிர்வாகி, தற்போது தெற்கு ெதாகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்தும், மாவட்ட நிர்வாகி என்பதால், மற்ற தொகுதிக்களுக்கான வேட்பாளர்களின் விவரம் குறித்தும் அவரிடம் கேட்க முயன்றபோது, `யாரைப் பற்றியும் எனக்கு தெரியாது, நானும் தெற்கு தொகுதியில் போட்டியிடவில்லை’ என உச்சகட்ட விரக்தியில் பேசினார். போட்டியிட வாய்ப்பு வழங்காததால், கட்சி தலைமை மீது அவருக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போறோம். ஆரம்பமே அதிருப்தியா இருந்தா என்ன பண்றதுனு, சக நிர்வாகிங்க புலம்புறாங்களாம்……

The post ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அதிருப்தியா..? appeared first on Dinakaran.

Related Stories: