சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வதன் தாத்பரியம் என்ன?

?சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வதன் தாத்பரியம் என்ன? சங்கு என்பது திருமால் கையில் இருப்பது அல்லவா?- கே.எல்.கந்தரூபி, திருவேற்காடு.சங்கநாதம் அதாவது சங்கிலிருந்து எழும்பும் ஒலியானது பரமேஸ்வரனுக்கு மிகவும் பிரியமானது. கிருஷ்ண பரமாத்மாவின் கையில் இருக்கும் சங்கிற்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். அதர்மத்தினை அழிக்கின்ற விதமாக மகாபாரதப் போர் தொடங்கும் வேளையில் அழிக்கும் கடவுளாகிய பரமேஸ்வரனை தியானித்தே கிருஷ்ணர் தன் கையில் இருக்கும் சங்கினை ஊதி சங்கநாதம் எழுப்பி போரினைத் துவக்குகிறார். சங்கு என்பது சிவபூஜைக்கு உகந்த பரிசுத்தமான பொருட்களில் முதன்மையானது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற செய்யுளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த ஒரு பொருளினை சுட்டு எரித்தாலும் அது கருமையான சாம்பலாக ஆகும். ஆனால், சங்கினை சுட்டாலும் அது வெண்மையாகத்தான் இருக்கும். பன்னெடுங்காலமாக சமுத்திரத்திற்குள்ளேயே இருந்து மிகுதியான புனிதத்தன்மையை சங்கு பெற்றிருக்கிறது. அதனாலேயே சங்கு பூஜை என்ற விசேஷ பூஜையும் உண்டு. மிகுந்த மடி, ஆச்சாரத்துடன் இருப்பவர்கள் தங்கள் இல்லத்திலேயே சங்கு பூஜை செய்வது வழக்கம். சங்கு என்பது அத்தனை உயர்வான பொருள் என்பதாலேயே அதில் நீர் நிரப்பப்பட்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா …

The post சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வதன் தாத்பரியம் என்ன? appeared first on Dinakaran.

Related Stories: