வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம், வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ கிஷோர், ஆண்ட்ரியா, வில்லனாக விக்ராந்த் நடிக்கின்றனர். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். தற்போது சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் சிம்பு, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ‘ஆடுகளம்’ கிஷோர் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதையடுத்து நடக்கும் படப்பிடிப்பில் சிம்பு, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கின்றனர்.
இத்துடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. இந்நிலையில் சிம்பு வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவுநேர படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனால், எனது சர்க்காடியன் ரிதம் (உயிரியல் சுழற்சி கடிகாரம்) குழப்பம் அடைந்துள்ளது’ என்று கூறியுள்ளார். இதனால் சிம்பு ‘அரசன்’ படத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி, முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
