சென்னை: ஸ்ரீ அம்மன் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் டி.ஜெயலட்சுமி எழுத்தில், இயக்குநர் சலங்கை துரை நிர்வாக தயாரிப்பில் உருவான படம் ‘அமைச்சர்’. ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருடன் அக்ஷயா, கிகீ, விஜயகுமார் மற்றும் பிர்லா போஸ் நடித்துள்ளனர். தேவா இசைக்கு மதன் கார்த்தி, கபிலன் சினேகன், கருணாகரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கின்றனர். இயக்குனர் சலங்கை துரை மேற்பார்வையில் இந்த படம் உருவானது. முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஓடிடி ப்ளஸ், ஜியோ டிவி தளங்களிலும் படம் வெளியாகி உள்ளது.
அமேசான் ப்ரைமில் வெளியானது அமைச்சர்
- அமேசான்
- சென்னை
- டி. ஜெயலட்சுமி
- சலங்கை துரை
- ஸ்ரீ அம்மன் மீடியாஸ்
- ஜெய் ஆகாஷ்
- அக்ஷயா
- கிக்ஸி
- விஜயகுமார்
- பிர்லா போஸ்
- தேவா
- மதன் கார்த்தி
- கபிலன் ஸ்நேஹன்
- கருணாகரன்
