விமர்சனம்: இரட்டையர்

கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் அபிநயா கடுமையான காயங்களுடன் உயிர் தப்புகிறார். அவரது மகள்கள் இரட்டையர்களான அனுமிதா, அனுஷிதா. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பழைய முகத்துக்கு மாறிய அம்மாவின் நடவடிக்கையில் தெரியும் மாற்றத்தை கண்டு பதறும் சகோதரிகள், அவரை ஒரு தனியறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை. அம்மா மற்றும் மகள்களுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து, சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை இயக்கியுள்ள ஜெகதீஷ் தம்பையா.எஸ், 92 நிமிடங்களில் படத்தை கச்சிதமாக முடித்துள்ளார். ‘நாடோடிகள்’ அபிநயா, அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். இரட்டை சகோதரிகளாக அனுமிதா, அனுஷிதா ஆகியோரின் நடிப்பு, படத்தை தாங்கி நிற்கிறது. சுப்பிரமணியம் சிவா நல்லவரா, கெட்டவரா என்பது புரியாத புதிர். பாலபாரதி, சங்கீதா, வெங்கட் சுபா ஆகியோரும் நடித்துள்ளனர். முகமது அமீனின் கேமரா இயல்பாக ஒளிப்பதிவு செய்துள்ளது. ஜிகேவியின் பின்னணி இசை கதையை நகர்த்த உதவியுள்ளது. சிறுமிகள் வன்முறையை கையிலெடுத்ததை மாற்றி யோசித்திருக்கலாம்.

Related Stories: