ஹீரோயின் படங்களுக்கு அதிக பட்ஜெட் கிடைப்பதில்லை: ரஜினி, அஜித் பட நடிகை கவலை

புதுடெல்லி: இந்திய திரைப்படங்களில் இன்னும், ஆண், பெண் கதாபாத்திரங்களில் பாரபட்சம் நிலவுவதாக நடிகை ஹுமா குரேஷி வேதனை தெரிவித்துள்ளார். பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, பாலிவுட்டில் பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். இவர் தமிழில் ரஜினியுடன் ‘காலா’, அஜித்துடன் ‘வலிமை’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

அவர் கூறுகையில், ‘‘மாறிவரும் காலத்திலும், ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கும் அதே அளவிலான நிதி ஒதுக்கீட்டையும் ஆதரவையும் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்ட படங்கள் பெறுவதற்கு இன்னும் சிரமப்படுகின்றன. பெண்களை முன்னிலைப்படுத்தும் கதைகளை கொண்ட படங்களுக்கு இந்தியாவில் அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், ஆண் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கும் பட்ஜெட், பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்ட படங்களுக்கு கிடைப்பதில்லை.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், திரையுலகில் உள்ள நடிகைகள் தொடர்ந்து எல்லைகளை தாண்டி, வருங்கால சந்ததியினருக்காக சினிமா துறையை மாற்றியமைக்க உழைத்து வருகின்றனர்.

Related Stories: