கிரித்தி சனோனை பார்த்து ஆபாச வார்த்தை: மன்னிப்பு கேட்டார் ராஷ்மிகா

 

மும்பை: பாலிவுட் நடிகை கிரித்தி சனோனை பார்த்து தான் பயன்படுத்திய ஆபாச வார்த்தைக்காக ராஷ்மிகா மேடையிலேயே மன்னிப்பு கேட்டார்.
இந்தியில் உருவாகும் ‘காக்டெயில் 2’ படத்தில் ஷாஹித் கபூருடன் ராஷ்மிகா, கிரித்தி சனோன் நடிக்கிறார்கள். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது மேடையில் ராஷ்மிகா, கிரித்தி சனோன் இருந்தனர். கிரித்தியை பற்றி ராஷ்மிகா பேசும்போது, ‘‘கிரித்தி அழகான பெண். அவரது ஸ்டைல் எனக்கு பிடிக்கும். இப்போது இந்த உடையில் …. ஹாட்டாக இருக்கிறார்’’ என்றார்.

ஹாட்டாக என்பதற்கு முன்பாக ஆங்கிலத்தில் எஃப் என்ற எழுத்தில் தொடங்கும் ஆபாச வார்த்தையை அவர் பயன்படுத்தினார். இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் ராஷ்மிகா பேசி முடித்த பிறகு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து ராஷ்மிகா பேசியதை அவரது காதில் சுட்டிக்காட்டினார்.

உடனே மீண்டும் மைக்கை வாங்கிய ராஷ்மிகா, அந்த வார்த்தைக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றார். மேலும் அந்த வார்த்தையை நீக்கிவிடும்படி செய்தியாளர்களை கேட்டுக்கொண்டார். பொதுமேடையில் என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் இப்படியெல்லாம் வார்த்தை விடலாமா என நெட்டிசன்கள் பலரும் ராஷ்மிகாவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Related Stories: