சென்னை: கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தால், நான் ஆபரேஷன் செய்ததாக சொல்வது வருத்தம் கொடுத்தது என்கிறார் கீர்த்தி சுரேஷ். தன் உடல் எடையை குறைத்ததும், எங்களுக்கு இந்த கீர்த்தி வேண்டாம் பழைய கீர்த்தி தான் வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். எலும்பும் தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேஷை பார்க்கவே பாவமாக இருக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில் ஜிம் ஒர்க்அவுட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தான் எடையை குறைத்தது எப்படி என்று விரிவாக தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அவர் கூறும்போது, ‘‘HIIT ஒர்க்அவுட், ஹை ப்ரோட்டீன் உடன் கூடிய கார்டியோ, லோ கார்ப் டயட்டை துவங்கினேன். இதையடுத்து 9 மாதங்களில் 10 கிலோ குறைத்தேன். மக்கள் என்னை வீக், அறுவை சிகிச்சை செய்து எடையை குறைத்தேன் என்று சொல்லும் வரை அதை நினைத்து நான் ரொம்ப பெருமைப்பட்டேன். நான் இயற்கையாக செய்ததை அப்படி விமர்சித்தபோது எனக்கு கஷ்டமாக இருந்தது. என் கடின உழைப்பை போய் அறுவை சிகிச்சை செய்ததாக சொல்லிவிட்டார்களே என வருந்தினேன். இதற்காகவே இந்த விளக்கம் அளித்திருக்கிறேன்’’ என்றார்.
