ஹீரோ ஆகிறார் துஷாந்

 

சென்னை: லண்டனில் வசிக்கும் துஷாந், தமிழ் சினிமாவின் மீதுள்ள காதல் காரணமாக, தமிழ் திரையுலகில் டன்ஸ்டன் இன்டர்நேஷனல் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அலுவலக பூஜை நடைபெற்றது. இப்பட நிறுவனம் தற்போது குறும்பட போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. குறும்பட போட்டியில் வெற்றி பெற இருக்கும் இயக்குனர்களுக்கு முதல் பரிசாக 30,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 20,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாயும், இந்நிறுவனம் வழங்குகிறது.

குறும்படங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி வருகிற மே மாதம் 25. பிரபல இயக்குனர்கள் இந்த குறும்படங்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்க இருக்கிறார்கள். மேலும் புரொடக்ஷன் நம்பர் ஒன் என்ற தற்காலிக தலைப்பில் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான துஷாந் நடிக்கும் திரைப்படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள், கதாநாயகி மற்றும் துணை நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் சென்னை மற்றும் புறநகர்களில் படபிடிப்பு நடக்க இருக்கிறது. இந்நிறுவனம் புதுமுக நடிகர் நடிகையர்களை திரையுலகில் அறிமுகம் செய்யும் பணியும் செய்கிறது.

Related Stories: