தனியறையில் கையை பிடித்து அழுத்தினார் இயக்குனர் மீது டெய்ஸி ஷா திடீர் புகார்

மும்பை: தமிழில் ஜீவா​ நடித்த ‘பொறி’, அருண் விஜய்​ நடித்த ‘மலை மலை’, மம்மூட்டி நடித்த ‘வந்தே மாதரம்’ ஆகிய படங்​களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியவர், இந்தி நடிகை டெய்ஸி ஷா. கன்னடம், இந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் அவர், தென்னிந்​திய இயக்​குனர் ஒரு​வ​ரால் தனக்கு ஏற்பட்ட கசப்​பான அனுபவம் குறித்து பேசியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது: நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில், தென்​னிந்​திய இயக்​குனர் ஒரு​வர், தனது படத்துக்காக ஒரு நடிகை​யை தேர்வு செய்​ய மும்பைக்கு வந்​திருந்​தார். அவரை நேரில் சந்​தித்து பேச சிலர் சென்றிருந்தோம்.

அவர் ஒவ்​வொரு​ பெண்ணை​யும் தனித்தனியாக சந்​தித்​து பேசினார். பிறகு என்​னிடம் பேசிய அவர், திடீரென்று என்னுடைய கையை பிடித்து அழுத்தியது எனக்​கு கொஞ்சம் கூட பிடிக்க​வில்​லை. மற்​றவர்கள் என்னை தொடு​வது குறித்து எப்​போதுமே ஒருவித பயம் ஏற்படும். நான் மசாஜ் செய்​யாததற்கு முக்கியமான காரணமே, மற்​றவர்​கள் என்​னை தொடு​வது பிடிக்​காததுதான்.

Related Stories: