ஆரி-பூஜிதா நடிக்கும் பகவான்

சென்னை: அம்மன்யா மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில், சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பகவான்’. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் எடிட்டிங் செய்திருக்கிறார். சம்பத் ஜியின் பாடல்வரிகளுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார்.

Related Stories: