16 வருடங்களுக்கு பிறகு ‘ரேனிகுண்டா 2’

தமிழில் ‘ரேனிகுண்டா’, ‘18 வயசு’, ‘கருப்பன்’, ‘ஐஸ்வர்யா முருகன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.பன்னீர்செல்வம், தற்போது ‘ரேனிகுண்டா’ படத்தின் 2ம் பாகத்தை இயக்கியுள்ளார். முதல் பாகத்தில், மறைந்த தயாரிப்பாளரும், நடிகருமான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் மகன் ஜானி, சனுஷா, நிஷாந்த், சந்தீப், தமிழ், ரிஷா, தீப்பெட்டி கணேசன் நடித்தனர். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்தார். கடந்த 2009ல் வெளியான இப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து `ரேனிகுண்டா 2’ படம் உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்திருந்தவர்கள் பலர் இதிலும் நடித்துள்ளனர். ஹீரோயினாக ஷாலினி நிவாஸ் அறிமுகமாகிறார். மறைந்த மலையாள நடிகர் திலகனின் பேரன் அபிமன்யு திலகன் தமிழில் அறிமுகமாகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உன்னி முகுந்தன் நடிப்பில் ஹிட்டான ‘மார்கோ’ என்ற படத்தில் எனது நடிப்பை பார்த்துவிட்டு இந்த வாய்ப்பை இயக்குனர் எனக்கு கொடுத்தார். இதில் 20 நாட்கள் எனது காட்சிகள் படமாக்கப்பட்டன. 95 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கேங்ஸ்டர் கேரக்டரில் வில்லனாக நடிக்கிறேன். தமிழ் வசனங்களை பேசி நடிக்க பன்னீர்செல்வம் நிறைய உதவிகள் செய்தார்’ என்றார்.

Related Stories: