ஹீரோவாகும் ஸ்டாண்ட் அஃப் காமெடியன்

ஸ்டாண்ட் அஃப் காமெடியன், டிஜிட்டல் திரை நட்சத்திரம் என்று ஜென் ஸீ ரசிகர்கள் கொண்டாடும் விக்கல்ஸ் விக்ரம், ‘லைட் வெயிட் பேபி’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கே.சி.குரு எழுதி இயக்க, ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்ய, சரவணன் சுப்பிரமணியம் இசை அமைக்கிறார். ஹிதா ஸ்டுடியோஸ் சார்பில் சாகர் சந்தேஷ், ஜி.திம்மா ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். விக்கல்ஸ் விக்ரம் கூறுகையில், ‘2016ல் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தேன்.

பிறகு சோஷியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன். ‘வாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நிலவை கொண்டு வா’ என்ற பாடலை ரீல்ஸாக பதிவேற்றினோம். அது வைரலானது. அப்போது எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன் ஆகியோர் தங்கள் கருத்துகளை போஸ்ட் செய்தனர். திடீரென்று இசை அமைப்பாளர் தேவா பேசி நன்றி சொன்னார். அந்த பாடல் எனது வாழ்க்கையை மாற்றியது. பத்து வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கிறேன். ‘லைட் வெயிட் பேபி’ என்பது இம்பேலன்ஸிங் லைஃப். போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும், மறுபக்கம் எடை அதிகமாகவும் இருக்கும். அது ஏன் என்பது படத்தின் கதை’ என்றார்.

Related Stories: