தவறான ரயிலில் ஏறினேன்: விவாகரத்து பற்றி மவுனம் கலைத்த ஹன்சிகா

மும்பை: கடந்த 2022-ம் ஆண்டு ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது ஹன்சிகாவின் திருமணம். தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை அவர் மணந்தார். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். 4 ஆண்டுகள் திருமண வாழ்வில் இருந்த ஹன்சிகா அண்மையில் கணவருடன் விவாகரத்து பெற்று பிரிந்தார். இருவருக்கும் மும்பையின் பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.இந்நிலையில் தனது விவாகரத்து குறித்து முதன் முறையாக பேசியிருக்கிறார் ஹன்சிகா.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “என் குடும்பம் எதற்காகவும் எனக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. மக்களுக்கு சுவாரஸ்யமான செய்திகள் தேவை. அவர்கள் அதை பெற்றுக்கொண்டார்கள். விவாகரத்து குறித்து நான் இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. இனியும் தெளிவுப்படுத்தமாட்டேன். காரணம் அது எனக்கு ஒரு பெரிய விஷயம் அல்ல. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதை விட அதிலிருந்து இறங்கி விடுவது நல்லது. என் குடும்பத்திலிருந்து எனக்கு ஆதரவு இருக்கிறது. நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை. நான் எங்கிருக்கிறேனோ அங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: