தமிழில் பேசி அசத்திய கிரித்தி ஷெட்டி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி நடிப்பில் வெளியான ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனெி’ என்ற படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் தமிழில் பேசி அசத்திய கிரித்தி ஷெட்டி, ‘எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும். என் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர். ஆனால், அவர் எனக்கு தமிழ் கற்றுக்கொடுக்கவில்லை. தற்போது நான் அற்புதமான தமிழ் மொழியை கற்றுக்கொண்டு, மிகவும் ரசித்துப் பேசி வருகிறேன்.

டிரைலரை பார்த்தபோது, என் கதாபாத்திரம் ரோபோ போல் இருக்கிறது என்று நினைத்தனர். அதுவே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியாக நினைக்கிறேன். இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தை உருவாக்கிய விதம் அற்புதமானது. ‘தீமா’ என்ற எனது கேரக்டரை பலர் பாராட்டினர். இது எனக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது. சீமான் சாரை சந்தித்த பிறகு எனது தமிழ் மேம்பட்டது. அவருடன் பேசும்போது, ஆங்கிலத்துக்கு பதிலாக சரியான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவார். அப்போது தமிழ் மொழியின் முக்கியத்துவமும், அதன் உண்மையான மதிப்பும் எனக்கு தெளிவாக புரிந்தது’ என்றார்.

Related Stories: