தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பூமிகா சாவ்லா. குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் தமிழில் விஜய்யுடன் ‘பத்ரி’, காந்துடன் ‘ரோஜாக் கூட்டம்’, சூர்யா ஜோடியாக ‘சில்லுனு ஒரு காதல்’ என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். மேலும், ‘சித்திரையில் நிலாச்சோறு’, ‘களவாடிய பொழுதுகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிரதர்’, ‘ஸ்கூல்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த பூமிகா சாவ்லா கடந்த 2007ம் ஆண்டு பாரத் தாக்கூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி கடந்த 2016ம் ஆண்டு வெளியான இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியின் அக்காவாக நடித்து கவனம் பெற்றார். அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பின்னர் கேரக்டர் ரோல்களுக்கு மாறி தனது நடிப்பு திறனை மேலும் நிரூபித்தார். சமீபத்தில் ‘யுஃபோரியா’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 1998ல் எடுக்கப்பட்ட தனது போட்டோ ஷூட் படங்களை பூமிகா சாவ்லா பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
