உடல் உறுப்புகளை ‘ஜூம்’ செய்து படம் எடுப்பதா? போட்டோகிராபர்கள் மீது ஜான்வி கபூர் பாய்ச்சல்

மும்பை: இந்திப் படவுலகை தொடர்ந்து தென்னிந்திய மொழியில் உருவாகும் படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர் கூறியதாவது: நான் பள்ளியில் படித்து வந்தபோது, ஒருநாள் கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றேன். அங்குள்ள சில மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அதில் எனது போட்டோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். 15 வயதிலேயே எனது போட்டோ ஆபாச இணையத்தில் மார்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. இது என்னை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்தது.

இப்போது ஏஐ மூலம் எனது உருவத்தை ஆபாசமாக சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அணியாத ஆடைகளை அணிந்திருப்பது போல், நான் போஸ் கொடுக்காத போட்டோக்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற போட்டோக்களும், வீடியோக்களும் மக்களிடையே என்னை பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு இயக்குனர் என்னிடம் குறிப்பிட்ட ஆடையை அணியச் சொல்லும்போது, எனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னால், உடனே அந்த போலியான போட்டோக்களை காட்டி, ‘நீங்கள் ஏற்கனவே இதுபோல் நடித்துள்ளீர்களே’ என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது. சமீபத்தில் சில போட்டோகிராபர்களிடம் பேசும்போது, ‘பெண்களின் உடல் உறுப்புகளை ‘ஜூம்’ செய்து படம் எடுப்பது அநாகரீகமானது’ என்று சொன்னேன். பணம் மற்றும் வியூஸ்க்காக ஒரு பெண் உடலை அவரது சம்மதமின்றி காட்சிப்படுத்தி வருவது தவறானது.

Related Stories: