சன் நெக்ஸ்ட்டில் வெளியான ‘வடம்’

சன் நெக்ஸ்ட்டில் ஒளிபரப்பாகி வரும் படம், ‘வடம்’. எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி சாகசங்கள் நிறைந்த உலகை இயல்பாகவும், வலிமையாகவும் உயிர்ப்பித்துள்ள இப்படம், ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட பாண்டிமுனி என்ற காளை, அறுக்கப்படும் நிலையில் இருந்து தோல்வி அறியாத சாம்பியனாக உயர்ந்த பயணத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. விமல் மூலமாக தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பாண்டிமுனி என்ற காளை, ஜல்லிக்கட்டு களத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளை முறியடித்து வெற்றிபெறுகிறது.

விமல், நட்டி, பாலசரவணன், சனஷ்கா  நடித்துள்ளனர். ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி எழுதி இயக்க, இமான் இசை அமைத்துள்ளார். விமல் கூறுகையில், ‘பாண்டிமுனி என்ற காளையுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அதற்கும், எனக்கும் நாளடைவில் நல்ல பந்தம் உருவானது. கடைசி நாள் படப்பிடிப்பு உணர்வுப்பூர்வமாக இருந்தது’ என்றார். நட்டி கூறும்போது, ‘இப்படம் நமது பாரம்பரிய கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் பிரதிபலிக்கும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. உலகம் முழுவதும் பார்வையாளர்கள் சன் நெக்ஸ்ட் மூலமாக இப்படத்தை பார்த்து வருவது, எங்களை போன்ற கலைஞர்களுக்கு அதிக மகிழ்ச்சி அளித்துள்ளது’ என்றார்.

Related Stories: