சாகுபடி பணிகளுக்காக வேளாண் கடன் ரூ.1.45 லட்சம் கோடி: வேளாண்மைத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2021-22ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:* காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்காக, கடந்த ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இதன் காரணமாக குறுவை சாகுபடி சிறப்பாக துவங்கப்பட்டு நடப்பாண்டில் 4.6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கடந்த 35 ஆண்டு டெல்டா வரலாற்றில் இல்லாத சாதனையாகும். * சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பண்ணை, பண்ணை சாரா நடவடிக்கைகளில் உள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய சுற்றுச்சூழல் சார்ந்த பயிர் சாகுபடி, இயற்கை விவசாயம், உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்குதல், பண்ணை சார்ந்த தொழில்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.* இதுவரை சுமார் 4,355 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலத்தில், 76 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. மாநிலத்தில் நான்கு லட்சம் மகளிர் சுய உதவிக் குழு குடும்பங்களின் வீட்டின் பின்புறத்தில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.* வேளாண் தொழிலில் பல்வேறு நிலையான உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி தனது 2021-2022ம் ஆண்டிற்கான திறன் சார்ந்த கடன் திட்டத்தில் வேளாண் கடனாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 509 கோடியும், வேளாண் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.9 ஆயிரத்து 607 கோடியும் வழங்கும் வகையில் விரிவான திட்டம் தயாரித்துள்ளது. * தானிய ஈட்டுக்கடன் வழங்க ஏதுவாக இத்துறையின் கீழ் இயங்கும் வேளாண் விளைபொருள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் சேமிப்புக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தவும், ஏலக்கூடங்களை வலுப்படுத்தவும் ரூ.4.69 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.* ஆடைகளின் அரசியான பட்டின் வளர்ச்சிக்கென நடப்பாண்டில் 250 ஹெக்டரில் மரவகை மல்பெரி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்க 75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மல்பெரியில் சொட்டு நீர்ப்பாசனம் ஊக்குவிக்கப்படும்….

Related Stories: