ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தமிழிசை ட்வீட்

புதுச்சேரி : மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது மகிழ்ச்சி.அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் திரு.தேவந்திர பட்னாவிஸ் அவர்கள் தலைமையிலான அரசு அங்குள்ள துறைமுகத்திற்கு பெயர் வைத்ததோடு, நம் தமிழ் மன்னரான ராஜேந்திரசோழனின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் உருவப்படத்தையும் திறந்து பெருமை சேர்த்துள்ளது.அதே போல மும்பையிலிருந்து லண்டன் செல்லும் ஒரு அரசு விமானத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயரும் சூட்டப்பட்டது என்பதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து பதிவிடுகிறேன்,’எனத் தெரிவித்துள்ளார். இதே போல், மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிப்புக்கு வரவேற்பு அளித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை இது என கூறினார். மேலும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அரசு விழாவானது நம் வரலாற்றின் மைக்கல் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்….

The post ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தமிழிசை ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: