ஹாட்ஸ்பாட் 2 இயக்குனருக்கு கார் பரிசு

சென்னை: இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கிய படம் ஹாட்ஸ்பாட் 2. அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான அனில் ரெட்டி, சுரேஷ்குமார், ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

Related Stories: