சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: பல்வேறு நெருக்கடிகளைதாங்கிக்கொண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி வரை முன்னேறியதும், ஆஸ்திரேலியா போன்ற வலிமை வாய்ந்த அணிகளை வீழ்த்தியதும் இந்திய மகளிர் ஹாக்கி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சாதனை. போட்டியில் தோற்றதற்காக கண்ணீர்விட்ட நீங்கள் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று ஆனந்த கண்ணீர் விடப்போவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணியினரின் போர்க்குணமிக்க ஆட்டத்தை பாராட்டும் வகையில் இந்திய அணிக்கு பாமக சார்பில் 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்….
The post இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பா.ம.க. சார்பில் 10 லட்சம் வெகுமதி appeared first on Dinakaran.
