
பல்வேறு மொழிப் படங்களில் 700க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர், அரிஜித் சிங் (38). இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் 28 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். தமிழில் ரிலீசான ‘புகழ்’, ‘24’, ‘பிரம்மாஸ்திரா: பார்ட் 1 சிவா’ ஆகிய படங்களில் பாடியுள்ளார். 2 முறை தேசிய விருது மற்றும் இந்தியாவின் பெருமைக்குரிய பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். கடந்த மாதம் திடீரென்று அரிஜித் சிங் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, பாடகர் பணியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இது அவரது ரசிகர்களை அதிர வைத்தது. இந்நிலையில், மேற்கு வங்காளம் பகுதியிலுள்ள ஜியாங் என்ற தனது சொந்த ஊரில், ‘ஹேசல்’ என்ற பெயரில் அரிஜித் சிங் ஓட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். அங்கு 40 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி வருகிறார். இது அங்கு வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் கவர்ந்துள்ளது.

