தனுஷ் படத்தில் நடிக்க சாய் பல்லவி, ஸ்ரீலீலாவுக்கு இவ்வளவு சம்பளமா?

சென்னை: தனுஷ் படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் இதுவரை வாங்காத அளவுக்கு சம்பளத்தை வாங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ‘அமரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்துக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அவர் இந்தியில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கு முன் தமிழில் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் கோபுரம் பிலிம்ஸ் படத்திலிருந்து விலகிக்கொண்டது.

இப்போது கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதில் நடிக்க சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஹீரோயின்களாக தேர்வாகியுள்ளனர். ‘அமரன்’ படத்துக்காக சாய் பல்லவி, ரூ.6 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இப்போது இந்தியில் உருவாகும் பான் இந்தியா படமான ராமாயணம் படத்தில் அவர் நடிக்கிறார். இதில் நடிக்க அவருக்கு சம்பளமாக ரூ.12 கோடி தரப்பட்டுள்ளது.

அதனால் தனுஷ் படத்தில் நடிக்க அவர் 14 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். கடைசியில் பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.12 கோடி தர தயாரிப்பு தரப்பு முடிவு செய்ததும் சாய் பல்லவியும் ஒப்புக்கொண்டுள்ளாராம். இதன் மூலம் நயன்தாராவின் சம்பளத்தை அவர் நெருங்கியுள்ளார். யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.15 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

‘புஷ்பா 2’, ‘பராசக்தி’ படங்களின் வெற்றிகளுக்கு பிறகு ஸ்ரீலீலாவும் பாலிவுட்டில் பிசியாகிவிட்டார். அவர் பராசக்தி படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கியிருந்தார். இப்போது தனுஷ் படத்துக்கு அவரது சம்பளம் ரூ.6 கோடியாம். ஆமிர் கானின் மகன் ஜுனைத் கான் ஜோடியாக சாய் பல்லவி ‘ஏக் தின்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் தனது சம்பளத்தை மேலும் உயர்த்துவாராம் சாய் பல்லவி.

Related Stories: