சீனியர் நடிகர்கள் பாலியல் தொல்லை: நடிகை எஸ்தர் பகீர் புகார்

ஐதராபாத்: தெலுங்கு, இந்தி, மராத்தி படங்களில் நடித்திருப்பவர் எஸ்தர் நோரோஹா. இவர் நடித்திருக்கும் ‘அமரவதிகி ஆஹவானம்’ தெலுங்கு படம் நாளை திரைக்கு வருகிறது. இது தொடர்பான பேட்டியில் அவர் சினிமாவில் பாலியல் தொல்லை குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியது: சினிமா துறையில் காஸ்டிங் கோச் தொல்லை இல்லையென சொல்ல முடியாது. இப்போதைய இளம் தலைமுறை பிரபலங்கள் ஏதேனும் நமக்கு உதவி செய்து அதற்கு கைமாறு எதிர்பார்ப்பதில்லை. ஆனால் பழை தலைமுறை பிரபலங்கள் (நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்) தங்களது படத்திற்கு காஸ்டிங் கோச் மூலம் நம்மை அணுகுகிறார்கள். பாலியல் உறவு தொடர்பான எதிர்பார்ப்பு அவர்களிடையே இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களை திரைத்துறையிலிருந்து ஒதுக்க வேண்டும். அத்துடன் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்கக் கூடாது. நானும் பலமுறை காஸ்டிங் கோச் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன். ஆனால் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதும் எனக்கு தெரியும். அதனால் என்னை யாரும் சீண்டவும் முடியாது. இவ்வாறு எஸ்தர் நோரோஹா கூறினார்.

Related Stories: