சரத்குமாரை வியக்க வைத்த சிம்ரன்

சமீபத்தில் வெளியான ‘ஆழி’ என்ற படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். அவரது மகள் வரலட்சுமி, ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இதில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா நடித்துள்ளனர். இப்பட விழாவில் கலந்துகொண்ட சிம்ரனிடம், ‘உங்கள் அழகுக்கு என்ன காரணம்? ஆண்டுகள் பல கடந்தும் அப்படியே இருக்கிறீர்களே’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிம்ரன், ‘எனது அழகுக்கு முக்கிய காரணம், உடற்பயிற்சிதான். தினமும் குறைந்தபட்சம் 4 முறை உடற்பயிற்சி செய்கிறேன்’ என்று சொன்னார். அவரது பதிலை கேட்ட சரத்குமார், ‘என்னது… தினமும் 4 முறை உடற்பயிற்சியா?’ என்று வியப்புடன் கேட்டார். அதற்கு சிம்ரன் சிரித்துக்கொண்டே, ‘ஸாரி சார்… வாரத்துக்கு 4 முறை என்று சொல்வதற்கு பதிலாக, ஒருநாளைக்கு 4 முறை என்று சொல்லிவிட்டேன்’ என்றார். அப்போது பார்வையாளர்கள் சிரித்தனர்.

Related Stories: