சங்கரய்யாவின் சேவைகளை இளைஞர்களிடம் சேர்ப்போம்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் “மக்கள் பணியில் சங்கரய்யா” என்ற தலைப்பில் குறுந்தகடாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று  நடைபெற்றது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன்  உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது: விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா தமிழக அரசியலில் பிரதான பங்கு வகித்தவர். அவருடைய 100வது ஆண்டு பிறந்தநாள் வரும் நாளை துவங்குகிறது. அன்றிலிருந்து ஓர் ஆண்டுகாலம் அவருடைய பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாடுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த கால கட்டத்தில் அவருடைய அரிய சேவைகள், மக்கள் பணிகள், அனுபவங்கள் ஆகியவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டுபோய் சேர்க்க இருக்கிறோம் என்றார்….

The post சங்கரய்யாவின் சேவைகளை இளைஞர்களிடம் சேர்ப்போம்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: